Chile Earthquake : சிலி நாட்டை உலுக்கிய சக்திவாந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

Chile Earthquake: சிலி நாட்டில் உள்ள அன்டோபகாஸ்டா என்ற பகுதியில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.3 magnitude earthquake hits chile no reports of major damage Rya

சிலி நாட்டில் உள்ள அன்டோபகாஸ்டா என்ற பகுதியில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் கடலோர நகரமான அன்டோஃபாகஸ்டாவில் இருந்து கிழக்கே 265 கிலோமீட்டர் தொலைவில் 128 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 9:51 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சேதம் மற்றும் பாதிப்பு குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

விமானத்தில் 5 மணி நேரம் எந்த உணவும் சாப்பிடாத பயணி; அயன் பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ நான் ஏற்கனவே பிராந்திய பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டுள்ளேன், இதுவரை பெரிய சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  ஆனால் குழுக்கள் தகவல்களை சேகரித்து வருகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் சிலியும் ஒன்று. இது பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளது. அதாவது பூமியின் பல எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் கொந்தளிப்பான பகுதி தான் ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படுகிறது. இதனால் சிலி நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம், வடக்கு சிலியின் தாராபாகாவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கொட்டும் மழை.. மின்சாரம் துண்டிப்பு.. இடிந்த வீடுகள்.. 40 பேர் பலி.. என்ன நடக்கிறது?

உலகில் பதிவுசெய்யப்பட்ட சில வலுவான பூகம்பங்களால் சிலி நாடு பாதிக்கப்பட்டுள்ளது.1960 இல் சிலியின் வால்டிவியா என்ற நகரில் 9.5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 2010 இல், 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்..

சிலி வரலாற்றில் சில முக்கிய நிலநடுக்கங்கள் :

1965 - லா லிகுவாவில் 7.4 ரிக்டர் அளவு, 400 பேர் இறந்தனர்

1971 - வால்பரைசோ பகுதியில் 7.5 ரிக்டர் அளவு, 90 பேர் இறந்தனர்

1985 - வால்பரைசோ கடலில் 7.8 ரிக்டர் அளவு, 177 பேர் இறந்தனர்

1998 - வடக்கு சிலியின் கடற்கரைக்கு அருகில் 7.1 அளவு

2002 - சிலி-அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் 6.6 ரிக்டர் அளவு

2003 - மத்திய சிலியின் கடற்கரைக்கு அருகில் 6.8 அளவு

2004 - மத்திய சிலியின் பயோ-பயோ அருகே 6.6 அளவு

2005 - 7.8 ரிக்டர் அளவு தாராபாகா, வடக்கு சிலி, 11 பேர் இறந்தனர்

2007 - வடக்கு சிலியின் அன்டோபகாஸ்டாவில் 7.7 ரிக்டர் அளவு, 2 பேர் இறந்தனர்

2007 - அன்டோஃபாகஸ்டாவில் 6.7 அளவு

2008 - தாராபாகாவில் 6.3 அளவு

2009 - 6.5 ரிக்டர் அளவு கடல் தாராபாகா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios