திருமணம் ஆகாமல் ஹோட்டலில் ஜாலியா என்ஜாய் பண்ணிய 6 ஜோடிகள் !! பொது மக்கள் மத்தியில் பிரம்படி !!

இந்தோனேஷியாவில் திருமணம் ஆகாமல் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி ஜாலியாக என்ஜாய் பண்ணிய 6 ஜோடிகளை கைது செய்த போலீசார், அவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் பிரம்படி தண்டனையை நிறைவேற்றியது.
 

6 couple enjoy in hotels

இந்தோனேசியாவில் சுமத்ரா மாகாணத்தில் சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அதேபோல் திருமணமாகாமல் ஒரு ஆணும், பெண்ணும் தனியாக இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. 

6 couple enjoy in hotels

இந்நிலையில் சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் பந்தா ஏக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் நடத்திய சோதனையின்போது திருமணமாகாமல் 6 ஜோடிகள் ஒன்றாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அவர்கள் 12 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டது. 

6 couple enjoy in hotels

முன்று மாதங்கள் சிறை தண்டனைக்கப் பிறகு அவர்கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 17 முதல் 25 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. 

பெண்கள் வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தனர். ஆனால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இதனை ஆர்வத்தோடு கண்டு களித்ததோடு, சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவும் செய்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios