Nobel Prize in Physics:2022: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற 3 விஞ்ஞானிகள் யார்? விவரம் என்ன?

2022ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆஸ்திரியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. 

3 researchers split the Nobel Prize in Physics.

2022ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆஸ்திரியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாஸர், மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆன்டன் ஜீலிங்கர் ஆகியோருக்கு நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

3 வெவ்வேறு நாட்டு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு: எதற்காக வழங்கப்பட்டது?

இந்த மூன்று விஞ்ஞானிகளும் “ போட்டோன்கள் குறித்த சோதனை, பெல் சமநிலையற்ற தன்மையில் ஏற்படும் கூறுகள், குவாண்டம் தகவல் அறிவியல்” ஆகியவற்றில் செய்த ஆய்வுக்காகவழங்கப்பட்டது.
இந்த 3 விஞ்ஞானிகளும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியலுக்கு மட்டும் வழங்கப்படும் உல்ப்(wolfprize) பரிசை கூட்டாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரான்ஸ் விஞ்ஞானி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆலன் ஆஸ்பெக்ட். இவர் கடந்த 1947ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பிறந்தவர். பாரிஸில் உள்ள சாக்லே பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்று, ஓர்சே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்பெற்றார். அதன்பின் கேமரூனில் 3 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். 

கடந்த 1980களில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு குவாண்டம் மெக்கானிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். இது தவிர ஓர்ஸே பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் ஆஸ்பெக்டுக்கு கிடைத்தது. 

நோபல் பரிசு பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள் என்ன?

குவான்டம் என்டேங்கில்மென்ட்  பிரிவில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஆஸ்பெக்டுக்கும், மற்ற இரு விஞ்ஞானிகளுக்கும் கிடைத்துள்ளது.

அமெரிக்க விஞ்ஞானி

நோபல் பரிசு பெற்ற மற்றொரு அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ஜான் கிளாஸர். கடந்த 1942ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள பசேடானாவில்  ஜான் கிளாஸர் பிறந்தார். கடந்த 1964ம் ஆண்டு கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஜான் கிளாஸர் இயற்பியல் பட்டம் பெற்றார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இயற்பியலும், டாக்டர் பட்டமும் ஜான் கிளாஸர் பெற்றார்
கடந்த 1969 முதல் 1996 வரை லாரண்ஸ் பெர்க்ளி தேசிய ஆராய்ச்சி மையத்திலும், லாரன்ஸ் லிவ்மோர் தேசிய ஆராச்சி மையத்திலும், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஜான் கிளோஸர் பணியாற்றினார்.

ஸ்வீடன் உயிரியல் வல்லுநருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு: எதற்காக வழங்கப்பட்டது?

பெல் இன்ஈக்குவாலிட்டி குறித்து புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டூவர்ட் ப்ரீட்மேனுடன் இணைந்து ஜான் க்ளோசர் பணியாற்றினார். 2010ம் ஆண்டு இயற்பியலுக்கான உல்ப் பரிசை, சக விஞ்ஞானிகளான ஆலன் ஆஸ்பெக்ட், ஆன்டன் ஜீலிங்கருடன் இணைந்து ஜான் க்ளோஸர் பெற்றார்.

2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசையும், ஆலன் ஆஸ்பெக்ட், ஆன்டன் ஜீலிங்கருடன் இணைந்து ஜான் க்ளோஸர் பெற்றார்.

ஆஸ்திரியா விஞ்ஞானி

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றதில் 3வது விஞ்ஞானி ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஆன்டன் ஜீலிங்கர். கடந்த 1945ம் ஆண்டு, மே 20ம் தேதி ஆஸ்திரியாவில் ஆன்டன் பிறந்தார். 

77வயதான ஆன்டன் ஜீலிங்கர், வியன்னா பல்கலைக்கழகம், இன்ஸ்பர்க் பல்கலைக்கழகம், மசாசூசெட்டஸ் பல்கலைக்கழகம், பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ விரிவுரையாளராக உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு இயற்பியலுக்கான உல்ப் பரிசை ஆலன் ஆஸ்பெக்ட், ஜான் க்ளோஸருன் இணைந்து ஜீலிங்கரும் பெற்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios