nobel prize 2022: ஸ்வீடன் உயிரியல் வல்லுநருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு: எதற்காக வழங்கப்பட்டது?
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உயிரியியல் வல்லுநர் ஸ்வான்டே பாபோவுக்கு 2022ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உயிரியியல் வல்லுநர் ஸ்வான்டே பாபோவுக்கு 2022ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் பரிமாண வளர்ச்சி பூமியில் எவ்வாறு நடந்தது, ஹோமோ சேபியன்ஸ் பரிணாம வளர்ச்சியிலிருந்து எவ்வாறு நாம் வேறுபடுகிறோம், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது குறித்து ஸ்வான்டே பாபோ ஆய்வு செய்தார்.
அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
முதல்நாளான இன்று மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நாளை(செவ்வாய்கிழமை) இயற்பியலுக்கும், புதன்கிழமை வேதியியலுக்கும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கபடுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.
குறிப்பாக மனிதர்களின் அழிந்துபோன மரபணுவோடு தொடர்புடைய நியண்டர்தால் மனிதர்களின் மரபணுவை வரிசைப்படுத்துதலை பாபோ செய்தார். இதற்கு முன் அறியபப்படாத டெனிசோவா என்ற மனித இனத்தின் ஒருபிரிவையும் பாபோ கண்டறிந்தார்.
ஏறக்குறைய 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து டெனிசோவா மனித இனம் இடம்பெயர்ந்தது. அதன்பின் ஹோமோ சேபியன்களுக்கு டெனிசோவா மனித இனம் மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை பாபோ கண்டறிந்தார்.
இன்றுள்ள மனிதர்களின் மரபணுக்களின் மாதிரியும், முன்பு இருந்த மனித இனத்தின் மரபணுவும் பல்வேறு விதங்களில் பொருந்திப் போகிறது. குறிப்பாக ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால் நமது உடல் எவ்வாறு நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவதைப் போல் முந்தைய மனிதர்களின் உடலிலும் நோய் தொற்று உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிந்தார்.
ஸ்வான்டே பாபோ ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். இவரின் தாய் தந்தை இருவருமே உயிரியல் வல்லுநர்கள். பாபோவின் தந்தை சன் பெர்ஜ்ஸ்டார்ம் கடந்த 1982்ம் ஆண்டு நோபல் பரிசு வாங்கியவர். பாபோ கடந்த 1967ம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
மனிதர்களின் தொடக்கம், மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக் குறித்து படிக்கும் பேலியோஜெனடிக்ஸ் குறித்து ஏராளமான ஆய்வுகளை ஸ்வான்டே பாபோ செய்துள்ளார். 1997ம் ஆண்டு ஸ்வான்டேவும் அவரின் சகாக்களும் சேர்ந்து நியான்டர்தால் மனிதர்களின் மரபணுக்களை வெற்றிகரமாக வரிசைப்படுத்தினர். நியான்டர்தார் பள்ளத்தாக்கில் உள்ள பீல்ட்கோபர் க்ரோட்டோ எனும் சுண்ணாம்புக்கல் படிவத்தில் இருந்து நியாண்டர்தால் மனிதர்களின் படிவங்களை எடுத்து, ஆய்வு செய்தார்.
கடந்த 2014ம் ஆண்டு நியாண்டர்தால் மேன்: இன் சர்ச் ஆஃப் லாஸ்ட் ஜினோம்ஸ் என்ற நூலை பாபோ எழுதினார். ஸ்வான்டே பாபோ தன்னை வெளிப்படையாக “கே செக்ஸ்” விரும்பி எனக் கூறிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு வழங்கப்பட்து. டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாபவுடியன் ஆகியோர் பெற்றனர்.