Asianet News TamilAsianet News Tamil

nobel prize2022: sweden: Alfred Nobel: நோபல் பரிசு பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள் என்ன?

அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டாலே நோபல் பரிசு சீசன் தொடங்கிவிடும். உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள், அறிவியல்வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு 6 நாட்களும், 6 பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்படும். 

The Nobel Prize season has arrived: Five things to know about the esteemed awards
Author
First Published Oct 3, 2022, 4:50 PM IST

அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டாலே நோபல் பரிசு சீசன் தொடங்கிவிடும். உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள், அறிவியல்வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு 6 நாட்களும், 6 பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்படும். 

முதல்நாளான இன்று மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நாளை(செவ்வாய்கிழமை) இயற்பியலுக்கும், புதன்கிழமை வேதியியலுக்கும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 

ஸ்வீடன் உயிரியல் வல்லுநருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு: எதற்காக வழங்கப்பட்டது?

வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கபடுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன

நோபல் பரிசை யார் உருவாக்கியது

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகளை ஆல்பிரட் நோபல் உருவாக்கினார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான ஆல்பிரட் நோபல் கடந்த 1896ம் ஆண்டு உருவாக்கினார். இவர் காலமான 5 ஆண்டுகளுக்குப்பின்  1901ம் ஆண்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நோபல் பரிசும் 9 லட்சம் டாலர்களைக்கொண்டது. நோபல் வெற்றியாளர்களுக்கு பரிசும், தங்கப்பதக்கமும் ஆல்பிரட் நோபல் உயிரிழந்த டிசம்பர் 10ம் தேதி வழங்கப்படும்.

இந்தியா, ஆப்பிரிக்காவிலும் கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள்: தகுதியற்ற அமெரிக்கா: புதின் விளாசல்

பொருளாதார விருது என்பது பேங்க் ஆப் ஸ்வீடன்  என அழைக்கப்படும். இந்த விருது ஸ்வீடன் மத்திய வங்கியால் 1968ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது 1901 முதல் 2021 வரை பொருளாதாரத்துக்கு 609 முறை வழங்கப்பட்டுள்ளது.

யார் வெற்றி பெறுவார்கள் என யாருக்குத் தெரியும்

நோபல் பரிசு நடுவர்கள் தங்களின் அறிக்கையை பற்றி கலந்துரையாட 50 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளனர். ஆதலால் 2022ம் ஆண்டு நோபல் பரிசாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்து கொள்ள  சிறுது காலமாகும்.

போட்டியாளர்களை யார் முன்மொழிகிறார்கள்

உலகெங்கும் இருக்கும் தகுதி படைத்த ஏராளமான வல்லுநர்கள் நோபல் பரிசுக்கான போட்டியாளர்களை முன்மொழிகிறார்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சட்டவல்லுநர்கள், எம்.பி.க்கள், செனட்உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என பரிந்துரைக்கிறார்கள். ஆனால், பரிந்துரைகள் 50 ஆண்டுகளுக்கு ரகசியம் காக்கப்படும். இருப்பினும் அவற்றைச் சமர்ப்பிப்பவர்கள் சில சமயங்களில் தங்கள் பரிந்துரைகளை பகிரங்கமாக அறிவித்துவிடுகிறார்கள்.

உக்ரைனின் 15% பகுதிகளை ரஷ்யா இணைத்தது செல்லாது ! நேட்டோ பதிலடி: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

நார்வேக்கு என்ன தொடர்பு

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும், மற்ற பரிசுகள் ஸ்வீடனில் வழங்கப்படும். இதை ஆல்பிரட் நோபல் விரும்பினார். இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆல்பிரட் காலத்தில்  ஸ்வீடனும், நார்வேயும் இணைந்த யூனியன்களாக இருந்தன. 1905ம் ஆண்டு பிரிந்தன. இருப்பினும் சில நேரங்களில் ஸ்வீடன், நார்வேக்கு இடையே மோதல் கூட ஏற்படும். பரிசுத் தொகையை யார் வைத்திருப்பது பராமரிப்பது என மோதல் நடந்திருக்கிறது

நோபல் பரிசு பெற என்ன செய்ய வேண்டும்

அமைதி மட்டும்தான்..

அறிவியல் வல்லுநர்கள்,பல்துறை வல்லுநர்கள் நோபல் பரிசுக்காக ஆண்டாண்டு காலம் காத்திருக்கிறார்கள், தங்கள் பணியை மட்டும் செய்யும்போது அவர்களின் பணி நோபல் பரிசு தேர்வுக்குழுவால் கவனிக்கப்படும். அவர்களின் எந்தப் பணி நடுவர்களை ஈர்க்கும் என்பது யாருக்கும் தெரியாது. மனித குலத்துக்கு நன்மை செய்தவர்களுக்கு மட்டும்தான் நோபல்  பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் விதி கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டல், ராணுவம் நிலைநிறுத்தத்தை ஒழித்தல் அல்லது குறைத்தல், அமைதியை ஊக்குவிப்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டுகிறது


 

Follow Us:
Download App:
  • android
  • ios