Asianet News TamilAsianet News Tamil

இந்தியா, ஆப்பிரிக்காவிலும் கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள்: தகுதியற்ற அமெரிக்கா: புதின் விளாசல்

இந்தியாவிலும், ஆப்பிரி்க்காவிலும் கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள், பல்வேறு நாடுகளிலும் இனவெறியை பரப்பின. அமெரிக்கா பேசுவதற்கேதகுதியற்றது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விளாசியுள்ளார்.

Putin reminded the West of the theft in India and Africa's colonial policies, the slave trade, and slaughter.
Author
First Published Oct 1, 2022, 12:28 PM IST

இந்தியாவிலும், ஆப்பிரி்க்காவிலும் கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள், பல்வேறு நாடுகளிலும் இனவெறியை பரப்பின என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விளாசியுள்ளார்.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தியது. 

இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவி்த்தது மட்டுமல்லாமல் உக்ரைனில் அரசுக்கு எதிராக, ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயல்படும் பகுதிகளையும் சுதந்திரம் பெற்றதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

Ukraine: nato:உக்ரைனின் 15% பகுதிகளை ரஷ்யா இணைத்தது செல்லாது ! நேட்டோ பதிலடி: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

ஏறக்குறைய 5 மாதங்கள் வரை உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் கடும் போர் மூண்டது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை அழித்து, பொருளாதார ரீதியாக நாசப்படுத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போருக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரி்க்கா கடும்கண்டனம் தெரிவித்தன. 

ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி தடை போன்றவற்றையும், சர்வதேச பணப்பரிமாற்றம் செய்யவும் தடை விதித்தன. இதனால் சர்வதேச சூழலில்இருந்து ரஷ்யா தனிமைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் கிரெம்ளின் நகரில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உக்ரைன் நாட்டின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். அதாவது உக்ரைனின், கேர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோன்ட்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது, இந்தப்பகுதிகளின் நில எல்லைகளைக் காக்க ரஷ்யா எந்த நடவடிக்கையும் எடுக்கும் என அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.

உலகின் 5 பெருங்கடல்கள் தெரியும், 6வது இருக்கு தெரியுமா? சர்ப்ரைஸ் கொடுத்த விஞ்ஞானிகள்.!

 அவர் பேசியதாவது:

நாம் கேள்விப்படுதெல்லாம், விதிகளின் அடிப்படையில் ஆட்சி என்று மேற்கத்திய நாடுகள் வலியுறுத்துகிறார்கள். இந்த விதிகள் எங்கிருந்து வந்தன, யார் இந்த விதிகளைப் பார்த்தது. யார் இந்த விதிகளுக்கு ஒப்புதல் அளித்தது. கவனித்துப்பாருங்கள், இது மிகப்பெரிய முட்டாள்தனம். முழுமையான வஞ்சனை, இரட்டை நிலைப்பாடு, மூன்றாம்நிலைப்பாடு என்று கூட சொல்லலாம். நாம் முட்டாள் என்று நினைக்கிறார்கள். 

ரஷ்யா ஆயிரம் ஆண்டுகள் பழமையான சக்திவாய்ந்த தேசம், முழுமையான நாகரீகம் வளர்ந்த தேசம். இதுபோன்ற பொய்யான விதிகளுக்கு சென்ரு வாழமாட்டோம்.

மேற்கத்திய நாடுகள் தாங்கள் செய்த வரலாற்றுப் பிழைகளுக்குகூட மனம்திருந்துவதற்கு மறுக்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டு மக்களும், பிற நாட்டினரும், தவறுகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று கோருகிறார்கள். இது முழுக்க காலணி ஆதிக்கத்தின் வெளிப்பாடு.

நான் மேற்கத்திய நாடுகளுக்கு சில விஷயங்களை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன். அடிமை வர்த்தகம், அமெரிக்காவில் இந்திய பழங்குடியின இனஅழிப்பு, இந்தியா, ஆப்பிரி்க்காவில் கொள்ளையடித்து, உங்களின் காலணி ஆதிக்கம், கொள்கை மீண்டும் இடைக்காலத்தில் தொடங்கியது. இது நீங்கள் இப்போதும் வலியுறுத்தும் மனிதநேயம், உண்மை, சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்கு முரணாக இல்லையா.

200 ஆண்டுகள் பழமையான கிரிஸ்டல் புல்லாங்குழல்… வாசித்து வரலாறு படைத்தார் லிசோ!!

மேற்கத்திய நாடுகள் எனச் சொல்லிக்கொள்ளும் நாடுகள் ஒருகாலத்தில் எல்லைப்பகுதி வரையரை என்பதை தங்கள் காலில் போட்டு மிதித்தவைதான். சுயநிர்ணய உரிமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு உரிமை இல்லை, யார் தகுதியற்றவர் என்பதை இப்போது மேற்கத்திய நாடுகள், தங்களின் சொந்த விருப்பப்படி தீர்மானிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளஇன் முடிவுகள் எதை அடிப்படையாகக் கொண்டவை,  முடிவெடுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

இந்த உலகிலேயே அணு ஆயுதங்களை இரு முறை பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்காதான். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை அமெரிக்கா அணுகுண்டால் தாக்கி அழித்து முன்னுதாரணமாக விளங்கியது அமெரிக்காதான். 

அமெரிக்கா தனது கொத்து குண்டுகளை வீசியும், நபாம் குண்டுகள், கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, கொரியா மற்றும் வியட்நாம் மக்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியது. ஆதாலல் விதியைப் பற்றிபேசஅமெரிக்கா தகுதியற்றது.

இவ்வாறு புதின் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios