ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்கள் தங்களை மீட்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கப்பலில் 135 இந்தியர்களில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:- ரஜினியை நம்பிய பாஜகவுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி... ஐடி எடுத்த அவசர முடிவு..!

இதுவரை சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இந்தியர்களும் அடங்குவர். அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் உள்பட அனைத்து பயணிகளும் பரிதவிப்பில் இருக்கிறார்கள். இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் இந்தியர்களும் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கப்பல் ஊழியர்களில் இந்தியர்களும் உள்ளனர்’எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே சொகுசு கப்பலில் தவிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிரதமர் மோடி தங்களை மீட்டு சொந்த நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:- மத்திய அமைச்சராகிறார் ஓ.பி.ஆர்... அதிமுக எதிர்கோஷ்டிகள் கலக்கம்..!