ரஜினியை நம்பிய பாஜகவுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி... ஐடி எடுத்த அவசர முடிவு..!

ரஜினியின் தரிசனம் தருகிற நேரம்தான் தமிழ்நாட்டின் எழுச்சி நேரம் என்று நம்பிக் கொண்டிருந்த பாஜகவுக்கு அதைவிட எழுச்சியாய் இன்னொருவன் கிளம்புகிறான் என்றால் கடுப்பேறாமல் என்ன செய்யும்? 

Vijay's shock to BJP's trust in Rajini

தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த விஜயை வருமான வரித்துறை ரெய்டு சீண்டிப்பார்த்து விட்டது. இதன் பின்னணியில் பாஜகவின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  இதை உறுதி செய்யும் விதத்தில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் ஷுட்டிங்கில் போய் கலவரம் செய்ய முயன்றார்கள் பத்துக்கும் குறைவான பாஜக ஆதரவாளர்கள். Vijay's shock to BJP's trust in Rajini

விஜய்க்கு கிடுக்கிப்பிடி போட்ட வருமான வரித்துறை, அவருக்கு தந்த அவமானங்கள் அரசியல் ரீதியாக அலசப்பட்டு வருகிற இந்த நேரத்தில், அவகாசமே கொடுக்கப்படாமல் ‘இன்றைக்கே ஆஜராக வேண்டும்’என மற்றொரு நோட்டீஸை அனுப்பி இருக்கிறார்கள்.  நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் எப்படி இன்றைக்கே ஆஜராவாரா? என்பது கேள்விக்குறியே. வருமான வரித்துறை அறிக்கையில் விஜயிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பிடிபடவில்லை என்கிற அறிவிப்பு வெளி வந்தது. அப்படி இருந்தும் விஜயை ஏன் மீண்டும் அழைத்துள்ளது வருமானவரித்துறை.

 Vijay's shock to BJP's trust in Rajini

விஜய் அடங்கி விடுவார் என நினைத்து ரெய்டு விட்டோம். ஆனால் முரண்டு பிடிக்கிறார் என்று வருமான வரித்துறை அதிகாரிகளை எண்ண வைத்திருக்கிறது விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள். அவரைக் காண திருவிழா போல கூடிய ரசிகர்களை அடக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். அவரது  ரசிகர்களின் கூட்டத்தால் நெய்வேலி ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

இந்த கூட்டத்தை இன்னும் ஆர்ப்பரிக்க விட்டுவிட்டார் விஜய். நேற்று தன்னை காணத் திரண்ட ரசிகர்கள் முன்பு தோன்றிய விஜய், ஒரு வேனில் ஏறி அத்ததனை கூட்டத்தோடும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்தார். இந்த உற்சாக நேரத்தை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஏற்றியிருக்கிறார்கள் ரசிகர்கள்.Vijay's shock to BJP's trust in Rajini

ரஜினியின் தரிசனம் தருகிற நேரம்தான் தமிழ்நாட்டின் எழுச்சி நேரம் என்று நம்பிக் கொண்டிருந்த பாஜகவுக்கு அதைவிட எழுச்சியாய் இன்னொருவன் கிளம்புகிறான் என்றால் கடுப்பேறாமல் என்ன செய்யும்? ஆகையால்தான் இன்றைக்கே ஆஜராகச் சொல்லி வருமானவரித்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios