நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி! சிறிய படகில் 300 பேர் ஏறியதால் விபரீதம்
நைஜீரியாவில் திருமணத்துக்குச் சென்று திரும்பும்போது சிறிய படகில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆட்கள் ஏறியதால் படகு கவிழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட குறைந்தது 103 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
வடக்கு நைஜீரியாவில் இலோரினில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள குவாரா மாநிலத்தின் படேகி மாவட்டத்தில் பாயும் நைஜர் ஆற்றில் திங்கள்கிழமை அதிகாலை படகு கவிழ்ந்துள்ளது. அந்தப் படகில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் நபர்கள் பயணித்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது.
புதிய கண்டிஷன் போடும் டிசிஎஸ்; வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்த பெண் ஊழியர்கள்
சமீபத்திய தகவலின்படி இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கியவர்களில் பெரும்பாலோர் பல கிராமங்களைச் சேர்ந்த உறவினர்கள். அவர்கள் நைஜரில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமணம் நடைபெற்ற ஒரு திருமணத்தில் ஒன்றாக கலந்துகொண்டு இரவு கிளம்பிச் சென்றார்கள்.
சிலர் மோட்டார் சைக்கிள்களில் விழாவிற்கு வந்தனர். ஆனால் மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அவர்களும் படகில் செல்ல வேண்டியிருந்தது. “படகில் அதிக சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 300 பேர் இருந்திருப்பார்கள். படகு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய மரத்தில் மோதி பிளவுற்றது” என்று உள்ளூர்வாசி ஒருவர் சொல்கிறார்.
ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய MRF பங்கு மதிப்பு! இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்
அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகள் நீரில் மூழ்கியதால், அருகிலுள்ள கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலில் சுமார் 50 பேரைக் காப்பாற்றினர். இருப்பினும் இன்னும் பலரது உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. செவ்வாய் மாலைக்குள், மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் உள்ளூர் வழக்கப்படி ஆற்றின் அருகிலேயே புதைக்கப்பட்டன.
இந்த விபத்து பல வருடங்கள் கழித்து ஏற்பட்டிருக்கும் மிக மோசமான படகு விபத்து என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். நைஜீரியா முழுவதும் உள்ள படகு விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. அங்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல்களே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான விபத்துக்களுக்கு அதிக சுமை ஏற்றுதல், சரியாக பராமரிக்கப்படாதது போன்றவையே காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஜோ பிடன் முன்பு மேலாடையின்றி போஸ் கொடுத்த திருநங்கை.. வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவம்.. வைரல் வீடியோ