புதிய கண்டிஷன் போடும் டிசிஎஸ்; வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்த பெண் ஊழியர்கள்!

இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் Work From Home அனுமதி மறுக்கப்பட்டதால் பல பெண் ஊழியர்கள் பதவி விலகியுள்ளனர்.

No Work-From-Home, Many Women Quit India's Largest IT Firm

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். இந்நிறுவனம் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே பணியுரியும் Work From Home முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுள்ளதால் அதிருப்தி அடைந்த பல ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, இவ்வாறு பணியில் இருந்து விலகி இருக்கும் ஊழியர்களில் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்கள் அதிகமான இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவலின்போது, பல நிறுவனங்களைப் போல டிசிஎஸ் நிறுவனமும் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அனுமதித்திருந்தது. அந்த அனுமதி கொரோனா பரவல் முடிவுற்ற பின்பும் தொடர்ந்தது.

பேரிடர்களில் ஒரு உயிர்கூட போகக் கூடாது... ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கி அமித் ஷா பேச்சு

No Work-From-Home, Many Women Quit India's Largest IT Firm

ஆனால், இப்போது மீண்டும் அலுவலக வேலைக்குத் திரும்ப அழைத்துள்ளது. இதற்கு பெண்களிடையே அதிக அதிருப்தி காணப்படுகிறது. ஆண் ஊழியல்களுக்கு இணையாக பெண் ஊழியர்கள் அதிக அளவில் பணிபுரியும் ஐடி துறையில் இந்த முடிவு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

"கொரோனா பொது முடக்கத்தின்போது வீட்டில் இருந்து வேலை செய்த பெண்களுக்கு அது சில விஷயங்ஙளில் வசதியாக இருந்திருக்கிறது இப்போது அவர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவதை விரும்பவில்லை" என டிசிஎஸ் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். டிசிஎஸ் ஊழியர்களில் சுமார் 36% பேர் பெண்கள் என்றும் தலைமைப் பதவி உட்பட இன்னும் பொறுப்புகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நிறுவனம் முயல்கிறது என்றும் லக்காட் கூறினார்.

படையெடுக்கும் புதுப்புது 5ஜி ஸ்மார்ட்போன்கள்... விலை குறையும் 4ஜி மொபைல்கள்... எதை வாங்கலாம்?

No Work-From-Home, Many Women Quit India's Largest IT Firm

"பாலின வேறுபாட்டை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு" என்றும் அவர் சொல்லியிருக்கிறார். சமீபத்திய ஆண்டுகளில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கான அனுமதி பல நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் உதவி இருக்கிறது. குறிப்பாக பெண்கள், வீட்டு கடமைகளை கவனித்துக்கொண்டே அலுவலகப் பணியையும் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த வாய்ப்பு பறிக்கப்படுவதால் அவர்கள் பணியில் இருந்து வெளியேற முடிவு செய்கின்றனர்.

உலக வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் பெண் தொழிலாளர் 24%. இது சீனாவைவிட பாதிக்கும் குறைவாகும். சீனாவில் பணிச்சூழலில் 61% பெண்கள் பங்கேற்பு உள்ளது.

சேரில் உட்கார்ந்தபடியே யோகா பண்ணுங்க! ஊழியர்களின் மன அழுத்தம் போக்க மத்திய அரசு அட்வைஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios