பேரிடர்களில் ஒரு உயிர்கூட போகக் கூடாது... ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கி அமித் ஷா பேச்சு
மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களைச் சந்தித்த அமித் ஷா, பேரழிவால் ஒரு உயிர்கூட இழக்கப்படாமல் இருக்க முயற்சி செய்யவேண்டும் என்றார்.
பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடியும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயத்தைத் தணிக்க ரூ.825 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான நெறிமுறை பின்பற்றப்படுவதற்கு ஒரு மாதிரி மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடனான சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை அறிவித்தார்.
5 நாடுகளின் உதவியை நாடும் டெல்லி போலீஸ்; பிரிஜ் பூஷனின் அத்துமீறலுக்கு ஆதாரம் கேட்டு கடிதம்
பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் கொள்கையில் முதலீடு செய்வதன் மூலம் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பேரிடர்கள் உயிர் இழப்பு இல்லாத நிலையை எட்டுவதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். மேலும், பேரிடர் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
பேரழிவால் ஒரு உயிர்கூட இழக்கப்படாமல் இருக்க முயற்சி செய்யவேண்டும் என்ற அவர், "கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய மாநில மாநில அரசுகள் பல மைல்கற்களை எட்டியுள்ளன. ஆனால் நாம் மனநிறைவுடன் இருக்க முடியாது... பேரழிவுகளின் தன்மை மாறிவிட்டது. அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதற்காக நாம் தயார்நிலையை கூர்மைப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கண்டிஷன் போடும் டிசிஎஸ்; வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்த பெண் ஊழியர்கள்!
2005-06 முதல் 2013-14 வரையிலான ஒன்பது ஆண்டுகளை 2014-15 முதல் 2022-23 வரையான ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.35,858 கோடியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து ரூ.1,04,704 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.25,000 கோடியில் இருந்து ரூ.77,000 கோடியாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
புதிதாகத் தொடங்கிய ஏழு அணுமின் நிலைய தளங்களில் நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறும் அவசரகால வெளியேற்றத்திற்கு ஆயத்தமாக இருக்குமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஓவரா பேசினாங்க... கொன்னுட்டேன்! தாயின் உடலை சூட்கேசில் எடுத்து வந்து சரணடைந்த பெண்!