5 நாடுகளின் உதவியை நாடும் டெல்லி போலீஸ்; பிரிஜ் பூஷனின் அத்துமீறலுக்கு ஆதாரம் கேட்டு கடிதம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார்கள் தொடர்பான ஐந்து நாடுகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் சுமத்தியுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பான தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்தோனேஷியா, பல்கேரியா, கிர்கிஸ்தான், மங்கோலியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீரர்கள் கூறியுள்ளதால் அந்த நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஓவரா பேசினாங்க... கொன்னுட்டேன்! தாயின் உடலை சூட்கேசில் எடுத்து வந்து சரணடைந்த பெண்!
இந்த வெளிநாட்டு மல்யுத்த அமைப்புகளிடம், போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்குமிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் போன்றவற்றை டெல்லி போலீசார் கோரியுள்ளனர். இருப்பினும், இந்த விவரங்கள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய ஜூன் 15ஆம் தேதிக்கு முன் கிடைக்காமல் போகலாம். எனவே, வெளிநாட்டில் இருந்து வந்த விவரங்களுடன் கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா திங்கள்கிழமை சிறப்பு ஆணையர் சாகர்ப்ரீத் ஹூடா, டிசிபிகள் பிரணவ் தயல் மற்றும் மனிஷி சந்திரா ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது சில சாட்சிகள் வீராங்கனைகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். வீராங்கனைகளுக்கு நெருக்கமான இன்னும் சிலர் குற்றம் நடந்ததைத் தாங்கள் பார்க்காதபோதும் குற்றச்சாட்டுகளை ஆதரித்தனர். ஆனால், நேரடி சாட்சிகளாக இருந்தவர்களே அதிக அளவில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேரில் உட்கார்ந்தபடியே யோகா பண்ணுங்க! ஊழியர்களின் மன அழுத்தம் போக்க மத்திய அரசு அட்வைஸ்
ஒரு வீராங்கனை பல்கேரியாவில் வைத்து பிரிஜ் பூஷன் தனது டி-ஷர்ட்டை இழுத்து, அவரது கையை தனது வயிற்றில் வைத்து சுவாசத்தைச் சரிபார்ப்பது போல் நடித்தார் என்று குற்றம்சாட்டியுளாளர். மற்றொரு மல்யுத்த வீராங்கனை கஜகஸ்தானில் தனது அனுமதியின்றி வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கப்பட்டதாகப் புகார் கூறியுள்ளார்.
இன்னொரு வீராங்கனை கிர்கிஸ்தானில் நடந்த நிகழ்வைக் குறிப்பிட்டார். தன்னை ஒரு பாயில் படுக்க வைத்து சுவாசத்தைப் பரிசோதிப்பது போல வயிற்றில் கை வைத்து பாவனை செய்தார் என்கிறார். மங்கோலியாவில் நடந்த போட்டிக்காகச் சென்றிருந்தபோது தன்னை பின்புறத்தில் தகாத முறையில் தொட்டதாக வேறொரு வீராங்கனையின் புகார் வந்துள்ளது.
மோடி அரசு குறித்து ஜாக் டோர்சியின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டமா?