Russia Ukraine War: அடங்க மறுக்கும் புதின் ..இப்ப வரலைனா இனி 10 வருஷம் வர முடியாது..மிரட்டல் விடும் ரஷ்யா..
Russia War: மே 1 ஆம் தேதிக்குள் ரஷ்ய நாட்டின் சந்தைக்குள் நுழையாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகள் வரை தடை விதிக்க ரஷ்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியது. போரை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்தது. தற்போது உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன.
ரஷ்யா உக்ரைன் போர்:
20 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போர் தாக்குதலில் இரு தரப்பில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களாக சுமி, கீவ், கார்கீவ், மரியுபோல், கேர்சன் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படை தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. உக்ரைனின் விமான படை தளம் உள்ளிட்ட இராணு அமைப்புகளை தொடர்ந்து அழித்து வருகிறது ரஷ்யா.
ரஷ்யாவின் போர் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் எனவும் இனப்படுகொலை நடப்பதாக கூறி உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எந்தவித அதிகாரமும், உரிமையும் இல்லை எனவும் சர்வேத நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அந்த நாட்டில் ரஷ்யப் படையோ, அதன் ஆதரவு பெற்ற மற்ற துருப்புகளோ இனி எந்த தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ரஷ்யா அந்த உத்தரவுகளை ஏற்க மறுத்துவிட்டது.
ரஷ்யா தீவிர தாக்குதல்:
உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. உக்ரைனின் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையே உக்கிரமடைந்துள்ள போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் உடைமைகளோடு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடயே ரஷ்யா தொடுத்துள்ள போரினை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. முக்கியமாக சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தார். இது ரஷ்யாவுக்கு எதிரான மிக பெரிய பொருளாதார நெருக்கடி ஆக கருதப்படுகிறது.
ரஷ்யா மிரட்டல்:
மேலும் ரஷ்யாவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது பணியை நிறுத்திக்கொண்டதோடு, முதலீடு மற்றும் சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் தங்களது வேலையை இழந்து திண்டாடி வருகின்றனர்.
இதனால் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் மே 1 ஆம் தேதிக்குள் மீண்டும் பணிகளைத் தொடங்காவிட்டால், அந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்குள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வணீக ரீதியிலான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத வண்ணம் தடை விதிக்கும் முடிவு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் அமைச்சகத்தின் தலைவர் அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Russia War: உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு..? தாய் நாட்டிற்காக இறுதிவரை போராடும் தலைவர்.