Russia War: உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு..? தாய் நாட்டிற்காக இறுதிவரை போராடும் தலைவர்..
2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான நடைமுறையை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க நோர்வே நோபல் குழுவிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
Russia Ukraine War: ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியது. போரை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்தது. தற்போது உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன.
உருகுலைந்த உக்ரைன்:
20 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போர் தாக்குதலில் இரு தரப்பில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களாக சுமி, கீவ், கார்கீவ், மரியுபோல், கேர்சன் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படை தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. உக்ரைனின் விமான படை தளம் உள்ளிட்ட இராணு அமைப்புகளை தொடர்ந்து அழித்து வருகிறது ரஷ்யா.
இருப்பினும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் இராணுவமும் பதிலடிக் கொடுத்து வருகிறது. இதுவரை ரஷ்யா வீரர்கள் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்ச்கம் தெரிவித்துள்ளது. மேலும் போர் தொடங்கியது முதல் தற்போது வரை எங்கும் தப்பித்து ஓடாமல் உக்ரைன் நாட்டிலே இருந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. மேலும் என் மக்களை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்யாவின் கொடுர தாக்குதலால் உருகுலைந்த உக்ரைனுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி:
மேலும் போருக்கு மத்தியிலும் மக்களின் தன்னம்பிக்கை இழக்காமல் வைக்க, அவ்வப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டு வருகிறார்.மேலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றி ஜெலன்ஸ்க் யின் பேச்சு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையே உக்கிரமடைந்துள்ள போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் உடைமைகளோடு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடயே உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.ரஷ்யாவும் அதற்கு பதலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது. முக்கியமாக சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தார். இது ரஷ்யாவுக்கு எதிரான மிக பெரிய பொருளாதார நெருக்கடி ஆக கருதப்படுகிறது.
நோபல் பரிசு:
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதிக்கான நோபல்பரிசு பரிந்துரைக்கான நடைமுறையை மார்ச் 31, 2022 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் அந்நாட்டின் மக்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்ளுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 ல் தொடங்கி 10 ஆம் தேதி வரை வெளியிடப்படும். 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு 251 தனி நபர்களும் 92 அமைப்புகளும் விண்ணப்பித்துள்ளன.
மேலும் படிக்க: Russia Ukraine War: அதிர்ச்சி..! குடியிருப்பு மீது ஏவுகணை தாக்குதல்..பலியான பிரபல உக்ரைன் நடிகை..