ஆண்களை திருமணம் செய்து பணம் பறித்த திருநங்கை கைது
மணப்பாறை அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த திருநங்கையை கைது செய்த காவல் துறையினர் மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பபிதாரோஸ் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளத்துடன், பலரையும் ஏமாற்றி பணம் பெற்றுகொண்டது உள்பட அடுக்கடுக்கான புகார்கள் நீண்டு கொண்டே சென்ற நிலையில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.21 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதற்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.