Asianet News TamilAsianet News Tamil

கூட்டணியை நம்பி வண்டி ஓட்டும் திமுக.. சீனாவுக்கு சப்போர்ட் செய்யும் கனிமொழி.. அண்ணாமலை அதிரடி.!

திமுக கூட்டணியை நம்பி வண்டி ஓட்டி வருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ திமுக ஏதாவது ஒரு தேர்தலில் தனியாக நின்று இருக்கிறார்களா?. திமுக வீர வசனம் பேசி வருகிறது. சீனாவிற்கு ஆதரவாக கனிமொழி எம்பி பேசுவது கண்டனத்துக்குரியது ஆகும். திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் தான் செய்தது.  2ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டது.

பாரதிய ஜனதா கட்சி கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. தென் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளுக்கும் வெற்றி கிடைக்காது. பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும்” என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.

Video Top Stories