One 2 One.. மோதும் சுந்தர் சி மற்றும் அனுராக் - மக்கள் செல்வன் குரலில் "சிங்கம் சிறுத்தை" Lyrical Video!
One 2 One Movie : இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் தான் One 2 One. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் நடித்துள்ளனர்.
இயக்குனர் திருஞானம் இயக்கத்தில், 24 Hours Production நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் உருவாகும் புதிய திரைப்படம் தான் One 2 One. தற்பொழுது இந்த திரைப்படத்திலிருந்து "சிங்கம் சிறுத்தை" என்கின்ற லிரிகல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது சுந்தர் சி நடிப்பில் வெளியாகும் இருபதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் அவர்கள் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மோதிக்கொள்ளும் ஒரு கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. ரியாஸ்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் "சிங்கம் சிறுத்தை" என்கின்ற லிரிக்கல் வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவிற்கு பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.