Asianet News TamilAsianet News Tamil

Kalki 2898 AD : துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா.. கல்கி படத்தில் யங் லுக்கில் வரும் அமிதாப் பச்சன்..

பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன்,கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தின் முக்கிய காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

ப்ராஜெக்ட் K என அறிவிக்கப்பட்டு கடந்த 2020ல் இந்த படம் துவங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 600 கோடியாகும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கல்கி 2898 AD திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைப்பாடுகள் நடந்துவருகிறது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு மே ஒன்பதாம் தேதி ரிலீசாகிறது. 

மகாபாரதத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரமான அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் கல்கி படத்தில் நடித்துள்ளார். அவரது அறிமுக வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா என தன்னை அமிதாப் பச்சன் அறிமுகம் செய்யும் வீடியோ சந்தோஷ் நாராயணன் இசையில் அருமையாக வந்துள்ளது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Video Top Stories