டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம்... மக்கள் வீதிகளில் தஞ்சம்!!
டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கலாஃப்கானில் இருந்து 90 கிமீ தொலைவில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.