ராஜீவ் காந்தி கொலைவழக்கு.. கைதாகி விடுதலையான சாந்தனின் மறைவு - இலங்கையில் நடைபெற்ற உணர்வுபூர்வ அஞ்சலி!

Santhanan Sri Lanka : மறைந்த சந்தனுவிற்கு இலங்கையின் பல்வேறு இடங்களில் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Ansgar R | Updated : Mar 03 2024, 05:00 PM
Share this Video

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி, பின் விடுதலையாகி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சாந்தனின் உடல் ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு இலங்கையின் வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட சாந்தனின் உடலுக்கு தமிழர் பிரதேசங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் முல்லைத்தீவு - மாங்குளம் சந்திப் பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர். 

Related Video