PM Modi : சென்னை வந்தார் பிரதமர் மோடி.. சாலை அணிவகுப்பில் பங்கேற்பு.. உற்சாகத்தில் பொதுமக்கள்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதற்காக சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை மாலை ரோடு ஷோவில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி. இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை வேலூர், நீலகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி என மத்திய அமைச்சர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமர் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ஒட்டி, தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தி. நகர் சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி. என். செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு தி. நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.