"பம்பாய்ல பாய் ஆளே வேறடா".. அதிரடி ஆக்ஷனில் மிரட்ட வருகின்றார் மொய்தீன் பாய் - லால் சலாம் ட்ரைலர் இதோ!
Lal Salaam Trailer : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி உள்ள திரைப்படம் நான் "லால் சலாம்". இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு எக்ஸ்டெண்டெட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடித்திருப்பது இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களான செந்தில், நடிகர் தம்பி ராமையா மற்றும் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிறகு 7 மணிக்கு இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 9.30 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்களும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ளார்.