Asianet News TamilAsianet News Tamil

திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..

திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

First Published Mar 1, 2024, 10:45 PM IST | Last Updated Mar 1, 2024, 10:45 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்து வந்த ஆராமுதன் நேற்று நாட்டு வெடி குண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொலை செய்ததாக கூறி ஐந்து இளைஞர்கள்  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தனர்.

சரண் அடைந்த இளைஞர்கள் மண்ணிவாக்கத்தைச்சேர்ந்த சத்தீயசீலன், அவினாசியைச் சேர்ந்த சம்பத்குமார், மணிகண்டன், திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ், வண்டலூரைச் சேர்ந்த முனீஸ்வரன் ஆவர்.சரண் அடைந்த ஐந்து நபர்களில், 4 பேரை வருகின்ற மார்ச் 6-ம் தேதி வரை, கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுவனுக்கு (தினேஷ்) 17 வயது மட்டுமே ஆனதால், செங்கல்பட்டு சிறுவர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

Video Top Stories