தைப்பூசத்தை முன்னிட்டு செங்குந்தர் முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!!
தைப்பூசத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள செங்குந்தர் ஸ்ரீமுருகன்கோயிலில் பக்தர்கள் அனைவரும் காவடி, பூங்கரகம் எடுத்து அலகு குத்தி வீதி உலா வந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள செங்குந்தர் ஸ்ரீமுருகன்கோயிலில் பக்தர்கள் அனைவரும் காவடி, பூங்கரகம் எடுத்து அலகு குத்தி வீதி உலா வந்தனர். முன்னதாக தைப்பூச தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் இன்று அதிகாலை முதலே சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றது. குறிப்பாக ஊத்தங்கரையில் உள்ள செங்குந்தர் ஸ்ரீமுருகர் ஆலயத்தில் இன்று காலை முதலே பக்தர்கள் அனைவரும் பால் காவடி, பன்னீர் காவடி, பூங்கரகம் எடுத்து அலகு குத்தி வீதி உலா வந்தனர். பின்னர் செங்குந்தர் தெருவில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முருக பெருமான் காவடி எடுத்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.