Asianet News TamilAsianet News Tamil

நான் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேட்டி!

தமிழகத்திற்கு கடந்த 10ஆண்டுகளில் 10லடசத்து 60ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ள நிலையில் வரும் நாடளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டும் புதிய வித்தைகளெல்லாம் எடுபடாது என்று கூறியுள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா.

நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற இருப்பதால் பாஜகவின் சார்பில் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற வேண்டிய கோரிக்கைகளை மோடியின் உத்தரவாதம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் பாஜக கட்சி சார்பில் எச். ராஜா தலைமையிலான குழுவினர் வாக்குறுதியில் குறித்து கருத்து கேட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு வந்த எச் ராஜா தலைமையிலான பாஜகவினர் விசைத்தறி உரிமையாளர்கள்,சிறு குறு தொழில் உரிமையாளர்கள் வணிகர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, “பிரதமர் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மட்டும் தான் தேர்தலுக்காக வருகிறார். திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம்  போகவில்லையா?  தமிழகத்தின் கள்ளுக்கடை திறந்து தமிழக மக்களின் குடியை கெடுத்த குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். தமிழ்நாடு போதை பொருட்களின் உறைவிடமாக மாறாக வருகிறது. ஜாபர் சாதிக் கடந்த 2006ம் ஆண்டு கடத்தல் வழக்கில் கைதானவர் ஆவார்.

மங்கை திரைப்படத்திற்கு முழுமையாக நிதி அளித்தவர் ஜாபர் சாதிக். இதனால் போதை பொருள் கடத்தலில் திமுக சம்மந்தம் இல்லை என்று எப்படி கூற முடியும். வரும் நாடளுமன்ற தேர்தலில் மக்களிடம் புதிதாக வித்தைகள் காட்ட முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கி உள்ளார். ஆனால் மக்கள் திமுக வித்தைகளை நம்ப மாட்டார்கள் என்றார். இந்த பாராளுமன்ற தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தல் ஆகும். திமுக தமிழர் இன விரோதிகள், துரோகிகள் இருக்க கூடியவர்கள் ஆவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு தமிழகத்திற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது.

கள் உணவு சார்ந்து என்பதாலும் விவசாயிகள் வருமானம் சார்ந்து என்பதாலும் பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளுக்கடை திறப்பு குறித்து பேசி இருப்பார். மழைநீர் வடிகால் பணிக்காக சென்னைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தது ஆனால் முறையாக செயல்படுத்தவில்லை. திமுக அரசு செயல்படுத்தும் திட்டத்தில் 60 சதவீதம் திருடும் ஆட்சியாக தான் திமுக அரசு உள்ளது என குற்றஞ்சாட்டினார். பாஜக கூட்டணி பொறுத்தவரை தேமுதிக, பாமக கூட்டணிக்குள் வருவது குறித்து தேசிய தலைமையில் இருந்து அறிவிப்பு செய்த பின்பு மாநில தலைமை நடவடிக்கை எடுக்கப்படும்

பிரதமர் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்பு ஒரு மீனவர் மட்டுமே கொல்லப்பட்டார். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர். அகில இந்திய தலைமை முடிவுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடுவேன். சிஏஏவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மதம் மாற்றம் செய்ய நிர்ப்பந்தம் செய்ய விகிதத்தால் 2014ம் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே தான் சிஏஏ சட்டம் என்றும், வாக்குபதிவு இயந்திரத்தில் யாராலும் குளறுபடிகள் செய்ய முடியாது. இதனை தேர்தல் ஆணையம் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி உள்ளதாக எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Video Top Stories