Asianet News TamilAsianet News Tamil

அரியலூர்: 52 கிடா மற்றும் 100க்கும் மேற்பட்ட சேவல்.. கோலாகலமாக நடந்த பூஜை..

அரியலூர் அருகே 52 கிடா மற்றும் 100க்கும் மேற்பட்ட சேவலுடன் கோலகாலமாக நடைபெற்ற விஸ்வகர்மா சமுதாய மக்களின் பூஜை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் செதலவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலானது தமிழகம் முழுவதும் உள்ள விஸ்வகர்மா சமுதாய மக்களின் பல குடும்பங்களுக்கு குலதெய்வம் ஆகவும் இதில் அரியலூர் மாவட்டம் இடையார்,குவாகம் கொடுப்பூர்,மருதூர்,இரும்புலிக்குறிச்சி, ஆலத்தியூர் ,உள்ளிட்ட  கிராமங்களை சேர்ந்த விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு குல தெய்வமாக உள்ளது.

இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பலி பூஜை நடைபெறுவது வழக்கம் இதைத் தொடர்ந்து  26 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த பலி பூஜை திருவிழா இன்று நடைபெற்றது  இந்த ஆண்டும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் வைத்தும் 52 கிடா மற்றும் சேவல்கள் பலியுடன் 500 பேருக்கு மேற்பட்ட குடும்பங்கள் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் பல்வேறு பக்தர்களின் காதணி விழா மற்றும் மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களுடனும் விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவானது எங்களது சமுதாய மக்களின் ஒற்றுமையை வளர்ப்பதற்கும் சந்திக்க முடியாத உறவுகளை சந்திப்பதற்கும் பாலமாக உள்ளதாக  கூறினர் திருவிழாவின் தொடர்ச்சியாக 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Video Top Stories