இது உண்ணாவிரத போராட்டமா? இல்லை உண்ணும் போராட்டமா? வெளியான வீடியோவால் கட்சி தலைமை அதிருப்தி!!
கோவையில் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் கடைகளில் டீ, காபி குடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் கடைகளில் டீ, காபி குடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் சிவனாந்த காலனி பகுதியில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதையும் படிங்க: தமிழக கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 16 பேர் பணியிடமாற்றம்... அறிவித்தது தமிழக அரசு!!
இந்த நிலையில் போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் டீக்கடைக்கு சென்று டீ, காபி, வடை என சாப்பிடத்தொடங்கினர். இந்த சம்பவம் உண்மையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.