"உங்க அண்ணனை நல்லாவே வாழ விடமாட்டீங்களா?" நம் தமிழர் கட்சியினரை சாடும் விஜயலக்ஷ்மி - சர்ச்சையை கிளப்பும் Video
Actress Vijayalakshmi : அடிக்கடி வீடியோ மூலம் பரபரப்பை கிளப்பும் நடிகை விஜயலக்ஷ்மி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மற்றும் அவரது கட்சியினர் மீது குற்றம்சாட்டி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான "நாகமண்டலா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் விஜயலட்சுமி. தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்கான Film Fare விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
25க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை விஜயலட்சுமி கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பூந்தோட்டம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மொழியில் வெளியான "பிரண்ட்ஸ்", "கலகலப்பு", "மிலிட்டரி", "வாழ்த்துக்கள்" மற்றும் "பாஸ் என்கின்ற பாஸ்கரன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த சூழலில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் தன்னை திருமணம் செய்துவிட்டு தற்பொழுது ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை சீமான் மற்றும் விஜயலக்ஷ்மி இடையே மோதல் நிலவி வருகின்றது, இந்நிலையில் சீமானை மேற்கோள்கட்டி, நாம் தமிழர் கட்சியினரை கடுமையாக சாடியுள்ளார் விஜயலக்ஷ்மி.