ஆளு செம பிசி.. இடையிடையே மறக்காமல் ஒரு ஆன்மீக பயணம் - சுந்தரராஜ பெருமாள் கோவிலில் யோகிபாபு சுவாமி தரிசனம்!
Actor Yogi Babu : தமிழில் முன்னணி நடிகராக விளங்கிவரும் யோகிபாபு, மெல்ல மெல்ல பிற மொழி படங்களிலும் அதிக அளவில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்த சூழலில் பரமக்குடியில் அமைந்துள்ள சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் நடிகர் யோகிபாபு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் யோகி பாபு நடித்துவரும் திரைப்படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனால் படப்பிடிப்பை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் யோகிபாபு தங்கி உள்ளார். இந்த நிலையில் இன்று மாசிமாத பௌர்ணமியை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நெய் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார் அவர். நடிகர் யோகிபாபு கோயில் வாசலில் இருந்த பசுமாட்டிற்கு வாழைப்பழம் வழங்கினார்.