க்ரைம் திரில்லர்.. புதிய கதைக்களத்தை கையில் எடுத்த வைபவ் - சத்தம் இல்லாமல் வெளியான "ரணம்" பட ட்ரைலர்!

Actor Vaibhav Ranam Trailer : பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ரணம் என்ற க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகியுள்ளது.

| Updated : Feb 16 2024, 09:27 PM
Share this Video

இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் பிரபல நடிகர் வைபவ் அவர்களின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது ரணம். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க ஒரு க்ரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகி உள்ளது. 

இந்த திரைப்படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஒரு Facial Reconstruction Artist ஆக நடித்துள்ளார் நடிகர் வைபவ். சென்னையில் நடக்கும் மர்மமான இறப்புகள் குறித்து விசாரணை செய்யும் போலீசாருக்கு உதவியாக களமிறங்குகிறார் வைபவ். இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வைபவ் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Video