கோவை பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி.. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
கோவையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு ஆதி தமிழர் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கையில் எடுத்து வந்த மாட்டிறைச்சியை பாஜக அலுவலகம் முன்னால் உள்ள சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். பாஜகவின் வானதி சீனிவாசன் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.