நடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..! வீடியோ
கிருஷ்ணகிரி அருகே நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து அவர் மீது கலர்பொடிகள் தூவி, முட்டைகளை வீசி சக நண்பர்கள் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராபிண்சிங் என்பவரது பிறந்த நாளை அறிந்த அவருடைய நண்பர்கள், பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர்.
அதற்காக அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபட்டனர், அந்த ஆலோசனைக்குப் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டம் உண்மையிலேயே வினோதமாக அரங்கேறியது.