Watch | கடவுளின் தேசத்தில் கோர விபத்து! நிலச்சரிவில் புதைந்த 3 கிராமங்கள்! - கழுகுப் பார்வை காட்சிகள்!

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

 

First Published Jul 31, 2024, 11:04 AM IST | Last Updated Jul 31, 2024, 11:04 AM IST

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அடுத்தடுத்து கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.  இதில், சுமார் 200 வீடுகள் மண்ணில் புதைகண்ட நிலையில் 1000 பேர் வரை சிக்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் இரவு பகல் பாராமல்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15்7ஆக அதிகரித்தது. 138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட உடல்கள், உடல் பாகங்கள் நிலம்பூரில் மீட்கப்பட்டது. 

Video Top Stories