'உறியடி' படத்தை நடித்து இயக்கிய விஜயகுமார், அதன் தொடர்ச்சியாக தற்போது 'உறியடி 2' படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீச்சரின் ஆரம்பத்திலேயே... "சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம் சகலமும் அவலமாகும். மனிதத்தன்மை கேள்விக்குறியாகும். பொறுமை காத்தால் உடமை பறிபோகும். உரிமை காக்க போராடுவதே கடமை. அரசியல்ல நாம தலையிடனும், இல்லாட்டி அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்' என்ற வசனங்களிடையே தோன்றும் பரபரப்பான காட்சிகள் தான் 'உறியடி 2' டீசர் 

இதில் தோன்றும் காட்சிகளும், வசனங்களும், இது அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என தெரிகிறது.