தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 19  வருடங்களாக அசைக்க முடியாத முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. வயது அதிகரிக்க அதிகரிக்க இவரின் அழகும் கூடி கொண்டே போகிறது என கூறிவருகிறார்கள் இவருடைய ரசிகர்கள் .

அதற்கு ஏற்ற போல்... கடைசியாக இவர் நடிப்பில் வெளியான '96 ' மற்றும் 'பேட்ட' படங்களில் அழகு தேவதை போல் மின்னினார் த்ரிஷா.

இந்நிலையில் இன்று இவர் தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை, முன்னிட்டு த்ரிஷாவின் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், இவர் நடித்துள்ள 'பரமபத விளையாட்டு' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி கதாநாயகர்களின் பிறந்த நாளில் மட்டுமே, அவர்கள் நடித்த படங்களின், டீசர், ட்ரைலர் வெளியாகி வந்த நிலையில்... தற்போது இந்த லிஸ்டில் த்ரிஷாவும் இணைத்துள்ளார்.

அரசியல், எமோஷன், திரில்லர்... என ரசிகர்களை கவரும் விதத்தில் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

த்ரிஷாவின் 60 ஆவது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை, இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ளார். 24 அவர்ஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அம்பரீஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.