நடிகை சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின், முழுமையாக திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து விலகினார். அவரை விவாகரத்து செய்த பின் மீண்டும் சோனியா ரீ-என்ட்ரி கொடுத்தாலும் இதுவரை அவருக்கு சொல்லும்படியான வலுவான கதாப்பாத்திரம் அமையவில்லை.

எனவே சீரியல் பக்கம் ஒதுங்கி, சீரியல் நடிகையாக மாறினார். மேலும் தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில், இவர் கதையின் நாயகியாக, 'தனிமை' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஃபுட் ஸ்டெப் ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இயக்குனர் சிவராமன் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதில் வயிற்றில் குழந்தோயோடு இலங்கையில் இருந்து அகதியாக இவர் வருவது, கவலை, பிரச்சனை, ஜெயில் உள்ளே இருப்பது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ள.

டீசர்: