நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரை கேப்மாரி திரைப்படத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்  நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் கேப்மாரி திரைப்படத்திற்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் . நடிகர் ஜெய் வைபவி ,  சாண்டில்யா , அதுல்யா ரவி ,  ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்மாரி.  சந்திரசேகர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் .  இந்த  திரைப்படத்தில் கள்ள உறவு குறித்து கூறப்பட்டுள்ளது.  

சட்டம் ஒரு இருட்டறை,  நாளைய தீர்ப்பு ,  சிகப்பு மனிதன் ,  என புரட்சிகரமான திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவர் எஸ்ஏ சந்திரசேகர் ஆனால் தற்போது அவர் உருவாக்கியுள்ள படம் அதற்கு நேர்மறையானதாக  உள்ளது .  அவர் இதுவரையில்  இயக்கிய திரைப்படங்களிலேயே மிக மிக மோசமான திரைப்படம் என்றும்  ரொமான்டிக் காமெடி என்ற பெயரில் அவர் இன்னொரு இருட்டு அறையில் முரட்டுகுத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் எனக்கு எஸ்ஏசியை  நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் இந்நிலையில் இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் பொறுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீதர்,   

எஸ். ஏ சந்திரசேகர் இயக்கியுள்ள கேப்மாரி திரைப்படம் மிக மோசமான கதை அம்சத்தைக் கொண்டுள்ளது .  ஏற்கனவே பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர் இயக்கியுள்ள கேப்மாரி போன்ற திரைப்படங்களை அதை ஊக்கு விப்பதாக உள்ளது, இப்படத்தை  திரையரங்குவரை அனுமதித்திருப்பது மிகப்பெரும் தவறு இத்திரைப்படத்தை தணிக்கைத்துறை எவ்வாறு அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை .  என்னை பொறுத்தவரையில் கதையம்சத்திற்காகவும்   அதில் இடம்பெற்றுள்ள மோசமான வசனங்களுக்காகவும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ  சந்திரசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்