Asianet News TamilAsianet News Tamil

இது தான்டா ரியல் கே.ஜி.எப்... மெர்சலான காட்சிகளுடன் வெளிவந்த சீயான் விக்ரமின் தங்கலான் டீசர் இதோ

பா. இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது.

Pa Ranjith directional Chiyaan vikram's Thangalaan official teaser gan
Author
First Published Nov 1, 2023, 11:49 AM IST | Last Updated Nov 1, 2023, 11:49 AM IST

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பா.இரஞ்சித். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படம் கே.ஜி.எப் எனப்படும் தங்கவயலை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. சொல்லப்போனால் கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎப்பைக் காட்டிலும் இதுதான் ரியல் ஸ்டோரி. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்திற்காக நடிகர் விக்ரம் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Pa Ranjith directional Chiyaan vikram's Thangalaan official teaser gan

தங்கலான் திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் உலகத்தரத்தில் வந்திருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே கூறி வந்தனர். அதனால் இதனை ஆஸ்கருக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில், தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

அந்த டீசரில் அதிர வைக்கும் போர்க் காட்சிகளும், மிரட்டலான சண்டைக்காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. தெலுங்கில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்கு இணையாக பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளது டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் மூலம் தெரிகிறது. இந்த டீசரை பார்த்து மெர்சலான ரசிகர்கள் இது தமிழ் சினிமாவில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முத்து பட பாணியில் நடந்த கூத்து... மலர் போட்ட லெட்டரால் நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios