கொஞ்சம் ரசிக்கவைத்து கொஞ்சம் சிரிக்கவைத்து போகப்போக அளவுக்கதிகமான பொறுமையை சோதித்த காண்ட்ராக்டர் நேசமணி ஹேஷ்டேக்கின் உச்சக்கட்ட அராகமாக ஒரு கல்லூரியின் விளம்பர வாசகம் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெறக்கூடாது  அவரது எதிராளிகளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட  நேசமணி காண்ட்ராக்டர் ஹேஷ்டேக் அதை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்ததைவிட மெட்ரோ சிட்டிகள் முதல் பட்டிதொட்டி வரை படு ஹிட். செல்போனில் வடிவேலு தலையில் சுத்தியல் விழாமல் ஆடும் கேம் வரை அது அதிரிபுதிரியாக வைரலாகிவிட்டது.

இந்த வரிசையில் நேசமணி ஹேஷ்டேக்கை வைத்து செய்யப்பட்டும் தொடர்ச்சியான செயல்கள் கொஞ்சம் சலிப்பைத் தர ஆரம்பித்திருக்கும் நிலையில் அராஜகத்தின் உச்சமாக அந்த ஹேஷ்டேக்கை உருவாக்கிய மூலகர்த்தாவான விக்னேஷ் பிரபாகர் நமது கல்லூரி மாணவர்தான் என்று பெருமை பொங்க  சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரி தின இதழ்களில் விளம்பரம் செய்துள்ளது. 

இந்தக் கொடுமைகள் இன்னும் தொடராமல் இருக்க வேண்டுமானால் சுத்தியல் தலையில் விழுந்தும் அப்பல்லோவில் ரெண்டு இட்லி சாப்பிட்டுப் பிழைத்த காண்ட்ராக்டர் நேசமணி அவர்களே நீங்க பேசாம தற்கொலை பண்ணிக்கொள்வதுதான் ஒரே வழி.