தல அஜித் - இயக்குனர் எச்.வினோத் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. பாலிவுட் திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டான, 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  

இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் நடித்த, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தல அஜித். இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.  மேலும் ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பில், இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்த நிலையில், தற்போது இந்த படத்தில் டீசர் வெளியாகி, அஜித் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. இதில் இதுவரை பார்த்திராத புதிய அஜித்தை கண் முன் நிறுத்தியுள்ளார் எச்.வினோத். அஜித் நடிகை ஷராதா ஸ்ரீநாத்தை பார்த்து, ஆர் யு வெர்ஜின், என கேட்டு முதல் வசனத்திலேயே அதிர வைத்துள்ளார்.

இந்த படத்தில் டிரைலர்
 இதோ: