முடிவுக்கு வந்ததா நயன்தாராவின் மார்க்கெட்... ரிலீஸ் ஆகமுடியாமல் தவியாய்த் தவிக்கும் ‘கொலையுதிர்காலம்’...
ஏற்கனவே பலமுறை தள்ளிப்போடப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’நேற்று எவ்வித முன்னறிவுப்புகளுமின்றி மீண்டும் ஒரு முறை ஜகா வாங்கியுள்ளது. இதனால் செம டென்சனுக்கு ஆளாகியுள்ளார் நயன்.
ஏற்கனவே பலமுறை தள்ளிப்போடப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’நேற்று எவ்வித முன்னறிவுப்புகளுமின்றி மீண்டும் ஒரு முறை ஜகா வாங்கியுள்ளது. இதனால் செம டென்சனுக்கு ஆளாகியுள்ளார் நயன்.
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். பல அறிவிப்புகளைத் தொடர்ந்து இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.இதனிடையே, அமரர் சுஜாதாவின்கொலையுதிர்காலம் கதை உரிமை தன்னிடம் இருப்பதால் அதே டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
பிறகு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. ஆகஸ்டு 1-ந் தேதி வெளியாகும் 2-ந் தேதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால் நேற்றும் படம் திரைக்கு வரவில்லைஇது உத்தேசமாக . 7-வது முறையாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வரும் வாரம் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’வெளியாவதில் அடுத்த வாரமும் இப்படம் ரிலீஸாக வாய்ப்பில்லை. இப்படி படம் தொடர்ந்து தள்ளிப்போவதால் தனது மார்க்கெட்டே ஆடிப்போயுள்ளதால் செம டென்சனில் இருக்கிறார் நயன்தாரா.