இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எஸ்.ஜெ.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில், எஸ்.ஜெ.சூர்யா... எலிக்கு பயந்து ஓடி ஒளியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ்பாபு தயாரிப்பில், பொடென்ஷியல் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.