'துருவங்கள் 16 ' திரைப்படத்தை இயக்கி,  முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம்,  ஒரு சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.   இந்த நிலையில் தற்போது இவர், நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மாஃபியா சேப்டர் 1 .

ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நடிகர் அருண்விஜய் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜாக்ஸ் பேஜோய். ஒளிப்பதிவு செய்துள்ளார் கோகுல் பேஜோய். படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீஜித் சாரங்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின்  இரண்டாவது டீசரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

நடிகர் அருண் விஜய்யின் ஆக்ஷன்,  பிரசன்னாவின் கெத்து, ப்ரியா பவானியின் என்ட்ரி, வேற லெவலில் உள்ளது. டயலாக் ஒவ்வொரும் ரசிக்கும் விதமாக உள்ளது.  இந்நிலையில் இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில்,  1மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து உள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அருண் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.