சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ரகுதாத்தா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கன்னட திரையுலகில் கேஜிஎப், காந்தாரா, சலார் போன்ற பிரம்மாண்ட ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் தான் ஹோம்பாலே. அந்நிறுவனம் தற்போது தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள திரைப்படம் தான் ரகு தாத்தா. இப்படத்தை சுமன் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திரா விஜய், ஜெயக்குமர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு யாமினி யாக்னாமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Kalki 2898 AD Release Date: பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 AD' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Raghuthatha Official Teaser | Keerthy Suresh |Suman Kumar | Vijay Kiragandur | Hombale Films

இப்படம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. மேலும் தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசரில் இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்களும் இடம்பெற்று உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியை திணிப்போம் என கூறினால் இந்தி தெரியாது போயா என சொல்லுவோம் என கீர்த்தி சுரேஷ் பேசுவது கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டீசருக்கு யூடியூப்பில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருக்கிறது. அதனால் இப்படம் ரிலீசுக்கு பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பல்லவி பற்றி தெரிய வந்த உண்மை... அம்பலமான சிதம்பரத்தின் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்