'சர்வம் தாளம் மயம்' படத்திற்கு கிடைத்த  நல்ல வரவேற்பை தொடர்ந்து, தற்போது ஜி.வி.பிரகாஷ், வித்தியாசமான லோக்கல் கதாபாத்திரத்தில் இறங்கி நடித்திருக்கும் திரைப்படம் 'குப்பத்து ராஜா'

இந்த படத்தை நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயங்கியுள்ளார். இந்த படத்தின்  டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள,  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி பாலக் லால்வாணி நடித்துள்ளார். ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பூனம் பாஜ்வா நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் வில்லன் நடிப்பில் மிரட்டியுள்ளார். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.  ஏப்ரல் 5ம் தேதி இப்படம்  ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.