*நான்கு தமிழக முதல்வர்களையும், ஒரு எதிர்க்கட்சி தலைவரையும் தந்த தமிழ் சினிமா, இன்று ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது. தமிழ்நாடு தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களை நசுக்கி அழிக்கின்றனர் அந்த பஞ்சபாண்டவர்கள்! என்று சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கியுள்ளார். 

*பிகில் படத்தின் டிரெய்லர், பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ் எண்ணிக்கையில் தாறுமாறான உச்சம் தொட்டிருக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஆக்‌ஷன் ஃபுல்லாக  படம் இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்திருக்கிறது. ஆனால் இந்த டிரெய்லரே படத்தின் கதையை சொல்லிவிட்டது! எனவே படம் மீதான சர்ப்பரைஸ் குறைந்துவிட்டது! என்று தயாரிப்பாளர் தரப்பிடம் சிலர் கொளுத்திப்போட, ஏற்கனவே பட்ஜெட்டை எகிற வைத்த விஷயத்தில் அட்லீ மீது கடுப்பிலிருந்த அந்த தரப்பு இப்போது எக்கச்சக்கமாக கொதித்துள்ளது. 

*தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பலர் இப்போது ‘விவசாயம், இயற்கை விவசாயம்’ பக்கம் திரும்பியுள்ளனர். அந்த விதத்தில், நல்ல கதைகளாய் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம்ரவியும், இயக்குநர் லக்‌ஷ்மணின் ‘பூமி’ எனும் விவசாய சப்ஜெக்ட்டில் நடிக்கிறார். கரிசல் பூமியின் பின்னணியில் ஃபர்ஸ்ட் லுக் ஈர்த்துள்ளது. 

*எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு, இயக்குநர் ராம் மிக நெருக்கம். அந்த லிங்க் வழியாக ராமின் ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டி நடித்தார். படம் பெரிதாய் ஈர்க்காவிட்டாலும், ராம் மீது மம்மூக்காவுக்கு பேரன்பு உருவாகிவிட்டது. எனவே  தனது லேட்டஸ்ட் மெகா ப்ராஜெக்ட்டான ‘மாமாங்கம்’ எனும் மலையாள பீரியட் ஃபிலிமின் தமிழ் வெர்ஷனுக்கு ராம்-ஐ வசனம் எழுதிட கேட்டு, அதை முடித்துக் கொடுத்துவிட்டார் ராம். 

*ஆன் தி வேயில் தன்னை சந்திக்கும் ரசிகர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள அஜித் மறுப்பதில்லை. அன்போடு சம்மதிக்கிறார். ஆனால் சில ரசிகர்கள் ‘தெய்வமே! கடவுளே’ என்று அவரிடம் உருகி, கடுப்பேற்றுகின்றனர். ஆனால் இந்த வார்த்தைகளை விட ‘தலைவா’ என்று தன்னை அழைப்பதைத்தான் சகிக்க முடியலை! என்று தனது மேனேஜரிடம் கடுப்பாகியிருக்கிறார் தல. 
-