கொரோனா வைரஸ் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது வரை திறக்கவில்லை. அரசின் அனுமதியோடு திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு சில பணியாளர்களை திரையரங்குகளை சுத்தம் செய்து வருகிறார்கள். அதே வேலையில் சில திரையரங்கு சேர் உள்ளிட்ட பொருட்கள் எலிகளால் சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதனால் கிட்ட தட்ட கடத்த நான்கு மாதங்களோ எந்த திரைப்படமும் திரையரங்கில் ரிலீஸாகவில்லை. மாறாக, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின், பெண்குயின், போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் சில படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


எப்போதும் கலகலப்பாக கூட்டம் அலைமோதி வரும் திரையரங்குகள், நான்கு மாதமாக வெறிச்சோடி கிடைப்பதால் இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உரிய பாதுகாப்புடன் திரைப்படங்கள் வெளியிட அரசு நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து ஒரு பக்கம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத பட்சத்தில், பாதுகாப்புகளுடன் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டால் ரசிகர்கள் வருவார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்கப்படுமா என்பதையும் பொருத்துவந்து தான் பார்க்க வேண்டும்.