பாக்யராஜ் கதாநாயகனான சுவாரஸ்ய கதை தெரியுமா..? போட்டுடைத்த பாரதிராஜா..! 

டாக்டர் மாறன் நடித்து இயக்கியுள்ள படம் "பச்சை விளக்கு". இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாரதிராஜா பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.அப்போது பாக்கியராஜ் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது குறித்து பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் முழ்க செய்தார்.

அப்போது, பச்சைவிளக்கு படம் மிகச் சிறந்த கருத்து கொண்டது. சொல்லப்போனால் இந்த படத்தை அரசே முன் எடுத்து உருவாக்கியிருக்க வேண்டும். நிதானம் தவறினால் ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி முடிந்து விடுகிறது என்பது மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் படம். இப்படி ஒரு அழகான படத்தை இயக்கி உள்ளதற்கு பாராட்டுக்கள் என தெரிவித்தார்

 

நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பாக்யராஜ் குறித்து பேசும் போது, "உதவி இயக்குனராக இருந்தபோது அவர் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் முறையை உற்று கவனித்தேன். ஒரு விதமான வித்தியாசமான முறையில் சொல்லிக் கொடுப்பார். அவரை பார்க்கும்போது எனக்கு நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கண்ணாடியை மாட்டி ஒரு ஹீரோவாக உருவாக்கினேன். அப்போது ஒரு சிலர் என்னிடம் கேட்டார்கள் உங்களுக்கு என்ன பைத்தியமா என்று? நான் அவர்களிடம் சொன்ன ஒரே பதில் என் கண்ணுக்கு கதாநாயகனாக தெரிகிறான் பாக்கியராஜ் என்றேன்.

அதன்பிறகு அவருடைய தனித்திறமையை கொண்டு மிகப்பெரிய உயரத்திற்கு சென்றார் பாக்யராஜ். நான் ஒரு விதை மட்டுமே என தெரிவித்துள்ளார் பாரதிராஜா. அதுபோல டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார். அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன். இந்த படத்தில் மிக புத்திசாலித்தனமாக காதலை சொல்லி விபத்து குறித்து மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் என குறிப்பிட்டார். மேலும் இளையராஜா குறித்து பேசும்போது இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே என தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.