மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 8-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க, விவசாயிகள் பிரச்சனையை பேசும் படம் என  இந்த படத்தின் ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. ஆனால், அதைத் தாண்டி இப்படத்தில் நிறைய விஷயங்களை பற்றி பேசியுள்ளார் அதர்வா. 

மேலும் முதல் முறையாக இப்படத்தில் முகமாற்று காட்சிகள் உள்ளது. அதன் ஒரு சிறு பகுதி தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது. கடைசியில் அதர்வா 'இயற்கை இலவசமாக தரும் காற்றுக்கும் தண்ணீருக்கும் கூட போராட வச்சிடீன்களேடா என்று ஆதங்கத்தோடு பேசுவது, தற்போதைய உண்மை சம்பவங்களை நினைவு படுத்துகிறது. 

இந்த படத்தின் ட்ரைலர் இதோ: