நடிகர் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சரியாக 06 :02 மணிக்கு, இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஏற்கனவே வெளியான முதல் போஸ்டரில், நடிகர் தனுஷ் நடுத்தர வயதில் காணப்பட்ட நிலையில் இரண்டாவது லுக்கில் சற்று இளமையானவராக காட்சியளிக்கிறார்.  மேலும் இதில் அரும்பு மீசையுடன், ஆக்ரோஷமான கண்கள், முகபாவனை மற்றும் கையில் ஆயுதம் என வேற லெவலில் உள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் நிலையில், இது ஒரே கேரக்டரின் புகைப்படமா? அல்லது மற்றொரு கேரக்ட்டரின் புகைப்படமா? என்பது இதுவரை வெளியாகவில்லை.  மேலும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டரில் தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையில் ,உருவாகும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் முதல் முறையாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் தமிழில் அறிமுகமாக உள்ளார். பிரகாஷ் ராஜ், பசுபதி ,உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.